சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல்கட்டமாக காரைக்குடி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது என்பதும், மும்பையில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும், இதற்காக தனியார் ஸ்டுடியோ ஒன்றில் மும்பை போன்ற செட் போடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் மழை காலம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மீண்டும் மும்பையில் படப்பிடிப்பு நடத்தாமல் சென்னையிலேயே செட் போட்டு படத்தை முடிக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இறுதிகட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments