'STR48' படத்திற்காக வேற லெவலில் தயாராகும் சிம்பு.. இயக்குனர் என்ன சொல்கிறார்? 

  • IndiaGlitz, [Monday,May 22 2023]

சிம்பு நடிக்க இருக்கும் ’STR48’ திரைப்படத்திற்காக அவர் வேற லெவலில் லண்டனில் உடற்பயிற்சி செய்து தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’STR48’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக தாய்லாந்தில் பாதுகாப்பு கலை குறித்த பயிற்சியில் இருந்த சிம்பு, தற்போது சிறப்பு உடற்பயிற்சிக்காக லண்டன் சென்றுள்ளார்.

இது குறித்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூறிய போது ’ஏற்கனவே சமீபத்தில் தாய்லாந்து சென்று பாதுகாப்பு கலையை சிம்பு பயின்று வந்ததாகவும் இதையடுத்து தற்போது அவர் ஒரு சில ஒர்க் அவுட்டுகள் செய்வதற்காக லண்டன் சென்று இருப்பதாகவும் அவர் திரும்பி வரும்போது வேற லெவலில் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்ட அதிரடி ஆக்சன் படம் என்றும் சிம்புக்கு மாஸ் காட்சிகள் அனைத்தும் இந்த படத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

’STR48’ படம் குறித்து வெளியாகி கொண்டிருக்கும் தகவல்கள் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.