சிம்பு இதுவரை நடித்திராத கேரக்டர்: 'மஹா' இயக்குனர் பெருமிதம்

  • IndiaGlitz, [Saturday,March 09 2019]

ஹன்சிகாவின் 50வது படமான 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவின் கேரக்டர் குறித்த வெளிவராத தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'மஹா' படத்தில் சிம்புவின் கேரக்டர் சிறப்புத்தோற்றம் இல்லை என்றும், அவருடைய கேரக்டர் படத்தில் சுமார் அரை மணி நேரம் வரும் அளவிற்கு கதைக்கு முக்கியமான கேரக்டர் என்றும் இயக்குனர் ஜமீல் தெரிவித்துள்ளார்.

முதலில் இந்த கேரக்டரில் என்னை நடிக்க ஹன்சிகா ஐடியா கொடுத்ததாகவும், ஆனால் இந்த கேரக்டருக்கு சிம்பு பொருத்தமாக இருப்பார் என்று நான் கூறியவுடன் அதனை ஹன்சிகா ஏற்றுக்கொண்டதாகவும் ஜமீல் மேலும் கூறினார்.

மேலும் சிம்பு நடிக்கவுள்ள இந்த கேரக்டர் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கேரக்டர் என்றும், அவருடைய ரசிகர்கள் பல வருடங்கள் மறக்க முடியாத வகையில் இந்த கேரக்டர் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

தற்போது லண்டனில் இருக்கும் சிம்பு, சென்னை திரும்பியதும் அவருடைய காட்சிகள் குறித்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இயக்குனர் ஜமீல் மேலும் தெரிவித்தார்.
 

More News

நீதான் என் உலக அழகி! மகளிர் தினத்தில் நயனை வாழ்த்திய விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 'நானும் ரெளடிதான்' படத்தின் படப்பிடிப்பின்போது காதல் வயப்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

சூர்யாவின் 'காப்பான்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஆர்யா, ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் அடுத்த படத்தில்  நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்!

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது ரவிகுமார் மற்றும் மித்ரன்

கார்த்தியின் 'கைதி' படத்தின் டெர்ரர் லுக்

தேவ் படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு த்ரில் படத்தில் நடித்து வருகிறார்.

ஒருமையில் பேசிய பிரேமலதாவுக்கு செய்தியாளர்கள் கடும் கண்டனம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று ஆரம்பத்தில் இருந்தே குழப்பத்தில் இருந்த தேமுதிக, எந்தவித கொள்கைப்பிடிப்பும்