சூர்யாவை அடுத்து சிம்புவுக்கு வில்லனாகும் ஆர்யா?

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தில் நடிகர் ஆர்யா வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு நடிக்கும் அடுத்த படத்திலும் ஆர்யா வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

கன்னட சூப்ப்ர் ஸ்டார் சிவ்ராஜ்குமார் மற்றும் ஸ்ரீமுரளி நடித்த 'மஃப்டி' என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவிருப்பதாகவும், இந்த படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களில் சிம்பு மற்றும் ஆர்யா நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. சிவராஜ்குமார் வேடத்தில் சிம்புவும், ஸ்ரீமுரளி கேரக்டரில் ஆர்யாவும் நடிப்பது உறுதியானால் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா நடிப்பதும் உறுதியாகிவிடும்

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கன்னடத்தில் 'மஃப்டி' படத்தை இயக்கிய நார்தன், இந்த படத்தையும் இயக்குவார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது
 

More News

எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படத்தின் நாயகி காலமானார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையை பெற்றது 'கூண்டுக்கிளி'

அதிக பேராசையால் அந்தரத்தில் தொங்கும் தேமுதிக

ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்தின் தேமுதிக முடிவெடுத்துவிட்டாலும், அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெற திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

'பிச்சைக்காரன்' இயக்குனர் சசியின் அடுத்த பட டைட்டில் என்ன?

விஜய் ஆண்ட்னி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி சாதனை வசூல் செய்தது

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் இளைஞர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தகவல்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் நீண்ட காலதாமதம் ஆகிவந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழும் பெற்றது