முதல்வருக்கு நன்றி கூறி 'மாங்கல்யம் தந்துனானே' பாடிய சிம்பு!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே தளபதி விஜய் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில் இன்று காலை நடிகர் சிம்புவும் அறிக்கை ஒன்றின் மூலம் தமிழக முதல்வருக்கு இதே கோரிக்கையை வைத்திருந்தார்.

அதனை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ’எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழக திரை உலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவர் அடுத்த சில நிமிடங்களில் ’ஈஸ்வரன்’ படத்தில் இடம் பெற்ற ’மாங்கல்யம் தந்துனானே’ என்ற வீடியோ பாடலையும் வெளியிட்டுள்ளார். சிம்பு மற்றும் நிதி அகர்வால் அட்டகாசமாக நடனமாடி உள்ள இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

More News

உங்களை யாரு தியேட்டருக்கு போக சொன்னது? கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி!

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இன்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது

அவுட் ஆன ஆரி: இறுதி போட்டியில் நுழைந்த பாலாஜி?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இறுதிப்போட்டிக்கு ஒரு நபர் நுழைவதற்கான டாஸ்க் ஒன்று வைக்கப்படுகிறது.

நடைமுறைக்கு வந்த ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வரை வாழ்த்தும் மக்கள்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,5000 ரொக்கம் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

'பாரதி கண்ணம்மா' ரோஷினிக்கு மனநிலை மாறியதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் ரோஷினிக்கு

நிவாரணத் தொகையை உயர்த்தி விவசாயிகளை குஷிப்படுத்திய தமிழக முதல்வர்… குவியும் பாராட்டு!!!

தமிழகத்தில் நிவர், புரெவி போன்ற புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர்