கர்நாடக மக்களுக்கு நன்றி கூறிய சிம்பு

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

காவிரி பிரச்சனை குறித்து அரசியல்வாதிகளும் திரையுலக பிரமுகர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக போராடி வரும் நிலையில் இந்த பிரச்சனையை கோர்ட்டாலும், அரசியல்வாதிகளாலும் தீர்க்க முடியாது, இரு மாநில மக்களிடையே உண்டாகும் அன்பால் மட்டுமே தீர்க்க முடியும் என்று வித்தியாசமான கருத்தை கூறியவர் நடிகர் சிம்பு ஒருவரே

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, ஏப்ரல் 11ஆம் தேதி கர்நாடகத்தில் வாழும் கன்னட மக்கள் அங்கு வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து இருமாநில மக்களுக்கும் இடையே எந்தவித வெறுப்பும் இல்லை என்று நிரூபியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த பல வருடங்களாக அரசியல்வாதிகளால் உருவாக்க முடியாத தமிழக, கர்நாடக மக்களின் ஒற்றுமையை சிம்புவின் இந்த ஒரே ஒரு பேட்டி உருவாக்கியது. ஆம், நேற்று கர்நாடகத்தின் பல இடங்களில் தமிழர்களை தேடித்தேடி தண்ணீர் கொடுத்த காட்சி அரங்கேறியது. சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த வீடியோக்கள் வெளியானது. ஆக காவிரி பிரச்சனை இரு மாநில மக்களுக்கு இடையே இல்லை என்பதும் இருமாநில அரசியல்வாதிகளால் ஏற்பட்டது என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கர்நாடக மக்களுக்கு சிம்பு தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து கன்னட மக்கள் பலரும் தமிழா்களுக்கு தண்ணீா் கொடுப்பது போன்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளீா்கள். இதன் மூலம் கன்னட மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. இடையில் உள்ள தீய சக்திகள் தான் நம்மை இணைய விடாமல் சதி செய்து வருகின்றன என்று உணா்த்தியுள்ளீா்கள். அவா்கள் முகங்களில் நீங்கள் கரியை பூசியுள்ளீா்கள். தமிழக மக்களிடம் கன்னட மக்களை வில்லன்போல் சித்தரித்த அரசியல்வாதிகளின் சுயரூபத்தை புரிந்து கொள்ள செய்த கன்னட மக்களுக்கு நன்றி. 

மேலும் கர்நாடகத்தில் ஒரு தமிழனை அடித்தால் அதை போட்டுக்காட்டி தமிழர்களிடையே வெறியை கிளப்பும் மீடியாக்கள் நேற்று தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்ததை எந்த பெரிய மீடியாக்களும் ஒளிபரப்பவில்லை. இதில் இருந்தே இந்த அரசியல்வாதிகள், மீடியாக்கள் நோக்கம் தண்ணீர் பெறுவது அல்ல என்றும், இரு மாநிலங்களுக்கும் இடையே சண்டை நடக்க வேண்டும் என்பதே நோக்கம் என்பதும் புரிந்துவிட்டது. இவ்வாறு சிம்பு தனது ஆடியோவில் கூறியுள்ளார்.

More News

ஒரே படத்தில் நயன்தாரா-தமன்னா

முதல்முறையாக நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் ரெய்னாவுக்கு முதன்முதலாக  வந்த சோதனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன், அதிக போட்டிகளில் விளையாடிவர், எந்த போட்டியையும் மிஸ் செய்யாதவர் ஆகிய பெருமைகளை கொண்டவர் சுரேஷ் ரெய்னா.

பிரதமருக்கு கமல் வீடியோ மூலம் விடுத்த கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கமல்ஹாசன் வீடியோவில் மோடிக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பிரபல இயக்குனர்கள் கைது

நரேந்திரமோடி இன்று காலை தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பிரபல இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

டாஸ்மாக்கையும் மூடுவீர்களா? ஐபிஎல் ரத்து குறித்து பிரபல நடிகர்

ஐபிஎல் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள். இதேபோல் டாஸ்மாக் கடைகளையும் மூடவும், அரசியல்வாதிகள் நடத்தி வரும் அனைத்து டிவி சேனல்களை மூடவும் போராடுவீர்களா?