மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன்‌: சிம்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிம்பு எஸ்பிபி மறைவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எத்தனை ஆயிரம்‌ பாடல்கள்‌?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்‌?? சிட்டாய்‌ பறந்து பறந்து குரலால்‌ உலகம்‌ வளைத்தார்‌. மொழிகள்‌ தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின்‌ அரசன்‌.

சாதாரணமான பாடகர்‌ இல்லை நம்‌ எஸ்‌ பி பி. இந்த உலகில்‌ துயரமானவர்களை மகிழ்விக்க... காலத்தால்‌ அவதியுற்றோர்களை அரவணைத்துக்‌ கொள்ள... உலகை தினம்‌ மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல்‌ மருத்துவர்‌.

என்‌ குடும்பத்திற்கும்‌ அவருக்குமான நிகழ்வுகள்‌ மறக்க இயலாதவை. என்‌ தந்தை கம்போஸ்‌ பண்ண பாடும்‌ நிலா பாட வந்திருந்தார்‌. குட்டிப்‌ பையன்‌ நான்‌ ரெக்கார்டிங்‌ பண்ண அமர்ந்திருந்தேன்‌. மற்றவர்களாக இருந்திருந்தால்‌ பாட மறுத்திருப்பார்கள்‌.

என்னைப்‌ பார்த்து தன்‌ சிரிப்பால்‌ வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும்‌ இல்லாமல்‌ நம்பிக்கை வைத்துப்‌ பாடினார்‌. இன்று வரை என்னால்‌ மறக்க முடியாத பதிவு அது. அதைப்போல... காதல்‌ அழிவதில்லை” படம்‌ நான்‌ நாயகனாக நடித்த முதல்‌ படம்‌. பாலு சார்‌ இவன்தான்‌ நாயகன்‌ என்ற பாடலைப்‌ பாடிக்‌ கொடுத்தார்‌.

முதன்‌ முதலில்‌ இவன்‌ தான்‌ நாயகன்‌” என எனக்காக உச்சரித்த குரல்‌ இன்றும்‌ என்னை நாயகனாகவைத்துக்‌ கொண்டிருக்கிறது. நன்றி மறவேன்‌ பாலு சார்‌. யாரையும்‌ காயப்படுத்தாத அந்த குணம்‌. தவறிப்‌ புரிந்துகொள்ளப்பட்டூவிட்டால்‌ மன்னிப்பு கோரும்‌ தன்மை, ஒரு குழந்தையைப்‌ போல தன்‌ வாழ்நாள்‌ முழுக்க வாழ்ந்து கடந்தவர்‌...

விடைகொடுத்து மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன்‌ பாடு நிலாவே... லவ்யூ...
 

More News

குழல் இனிது, யாழ் இனிது எல்லாம் கிடையாது: எஸ்பிபி குரல் தான் இனிது: கலைப்புலி எஸ் தாணு!

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள், எஸ்பிபியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு, ஆனா இதுக்கு அளவே இல்லை; இளையராஜா

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்

ஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்!!!

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை சட்டவிரோதமாக ஒரு கும்பல் விற்க முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்!!!

சீனாவில் 700 ஆண்டு பழமையான ஓவியம் ஒன்று ஏலம் விடப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மறக்க முடியாது பாலு சார், மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் ஆகியோர் வெளியிட்ட வீடியோ குறித்து பார்ப்போம்