முதலாளியும் நடிக்கலாம் என்பதை ஆரம்பித்து வைத்தவர் வசந்தகுமார் தான்: பிரபல தமிழ் ஹீரோ புகழாரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னியாகுமரி தொகுதி எம்பியும் பிரபல தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் அவர்கள் நேற்று முன் தினம் மாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோ சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:
உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும் விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் என துவக்கி வைத்தவர்.
கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தை கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர்...
குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர். சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால் இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை.
ஏற்க முடியாத இழப்பு இது. மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ள விஜய் வசந்த் மற்றும் வினோத் குமார், இருவரும் தோள் சாய்ந்து கொள்ள தோழனாக நான் நிற்பேன். மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு எச்.வசந்த குமார் அவர்களை இழந்துவாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் நடிகர் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com