பணமோ, வார்த்தைகளோ இதை ஈடுசெய்துவிட முடியாது: சிம்புவின் பரபரப்பு அறிக்கை

  • IndiaGlitz, [Saturday,February 22 2020]

சமீபத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவம் திரையுலகினர்களையே அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இந்த விபத்து குறித்தும், உயிரிழந்தவர்கள் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

'துப்பறிவாளன் 2' படத்தில் இருந்து விலகிவிட்டாரா மிஷ்கின்? பரபரப்பு தகவல்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது

நடிகை ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்த ரசிகர்: வைரலாகும் வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு தப்பி ஓடிய இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

500 ஆண்டுகள் பழமையான மனித எலும்பு, மண்டை ஓடுகளால் ஆன சுவர்!

பெல்ஜியத்தின் கதீட்ரல் நகரில் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.

தூத்துகுடியில் ரஜினியை யார்? என கேட்டவர் திருட்டு வழக்கில் கைது!

உலகமே யார் என்று தெரிந்த ரஜினியை அவமதிக்கும் நோக்கத்துடன் 'நீங்கள் யார்? என கேட்டவர் தூத்துகுடி இளைஞர் சந்தோஷ். தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது

"உலகத் தாய்மொழி தினம்" பிப்ரவரி 21

மொழி ஒரு அழகான ஊடகம். எழுத்துக்களைச் சேர்த்து, வார்த்தைகளைக் கோர்த்து,