நேற்றுவரை புதிய படம் குறித்து பேசி கொண்டிருந்தார்: கே.வி. ஆனந்த் மறைவுக்கு சிம்பு இரங்கல்

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

பிரபல இயக்குநர் கேவி ஆனந்த் அவர்கள் திடீரென இன்று அதிகாலை காலமானதால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேவி ஆனந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சற்று முன் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் கேவி ஆனந்த் அவர்களின் மறைவிற்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியை தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்று தான், என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை, எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கேவி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நடித்திருக்க வேண்டியது, அப்போது இருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அழகான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லி இருந்தேன். தினமும் என்னோடு தொடர்பில் இருந்தார். நேற்று வரை பேசிக் கொண்டிருந்தவர், இன்று அதிகாலை மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்வதை நான் மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச்செய்தியாக இருக்ககூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்து இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராக வெற்றி பெற்றவர்களில் கேவி ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறைய படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாக பயணித்துவிட்டார். இறைவனிடம் திரைத்துறைக்கு அவரது மறைவு பேரிழப்பு.

அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் கரங்களில் இளைப்பாறட்டும்.

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்

More News

ஆக்சிஜன் வாங்க ரூ.1 கோடி நிதியுதவி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

'தளபதி 65' நாயகியின் சம்மர்கால கிளாமர் புகைப்படம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்! 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65'. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நிலையில்

ஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு மோசம் அடைந்து உள்ளது.

'பாக்காதே பாக்காதே' பாடலுக்கு ஆடிய நடிகையா இவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான 'ஜென்டில்மேன்' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை சுபஸ்ரீ. இந்த படத்தில் இவர் அர்ஜுனுடன் இணைந்து 'பார்க்காதே பார்க்காதே

மே 2 வாக்கு எண்ணிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.