மணிரத்னம்-சிம்பு படம் என்ன ஆச்சு?


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் சிம்பு மீது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கடுமையான புகார்களை பத்திரிகையாளர் முன் பதிவு செய்தனர். இதனால் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்ட் விதிக்க வாய்ப்பு இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இதுகுறித்து சிம்பு தற்போது விளக்கம் அளித்துள்ளார். 'மணிரத்னம் படத்தில் என்னை நடிக்கவிடாமல் செய்ய பல முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் நான் நடிப்பேனா? என்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளிவரும் செய்திகளுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பில் நான் ஜனவரி 20ஆம் தேதி முதல் கலந்து கொள்ள போகிறேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் நாளை நடைபெறவுள்ள 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டின்போது மனம் திறந்து சில கருத்துக்களை பேசவிருப்பதாகவும், என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பது என்னுடைய நோக்கம் இல்லை என்றும், என்னுடைய ரசிகர்களுக்கு விளக்கம் அளிப்பது மட்டுமே என்னுடைய நோக்கம்' என்றும் கூறியுள்ளார்.
'சக்கபோடு போடு ராஜா' படத்தின் பாடல்களை நாளை தனுஷ் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments