நான் எப்போதுமே தலைகீழ் தான்: சிம்பு

  • IndiaGlitz, [Thursday,December 07 2017]

சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நடிகர் சிம்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  நேற்று கலந்து கொண்டு பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டதும் ஒரு சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது.

இந்த விழாவில் சிம்பு பேசியபோது, 'இந்த படத்தில் நான் இசையமைக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம் சந்தானம். சந்தானத்தை நான் அறிமுகப்படுத்தியதாக கூற மாட்டேன். அவருடைய திறமை தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர் மிகவும் அன்பானவர். அதேபோல் விடிவி படத்தில் இருந்தே எனக்கு நல்ல பழக்கமான விடிவி கணேஷ் அவர்களும் 'நீதான் இந்த படத்திற்கு மியூசிக் டைரக்டர்' என்று அன்பாக உரிமையுடன் கேட்டுக்கொண்டார்

தனுஷ் இந்த விழாவிற்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் ஒரு கடின உழைப்பாளி. துள்ளுவதோ இளமை' படத்தில் இருந்து அவரை கவனித்து வருகிறேன். அவர்  பக்கத்தில் எனக்கும் கடவுள் ஒரு இடம் கொடுத்தது மிகுந்த சந்தோஷம்

எனக்கும் இந்த உலகத்தில் இருப்பாவர்களுக்கும் இடையே ஒரே ஒரு பிரச்சனைதான். மற்றவர்கள் பார்ப்பதை நான் தலைகீழாக பார்ப்பேன். அப்படியே வளர்ந்துவிட்டேன். உதாரணமாக மாதா பிதா குரு, தெய்வம் என்ற வரிசையில் தான் அனைவரும் பார்ப்பார்கள். நான் இதில் மாறுபடுகிறேன். எனக்கு முதலில் இறைவன் தான். அவரை நான் கடைசி இடத்திற்கு தள்ள விரும்பவில்லை. அடுத்ததாக என் குரு. யாரோ பெற்ற பிள்ளையை ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர் தான் குரு. அடுத்ததாக தகப்பன். தன்னலம் இல்லாமல், தான் அடைய முடியாத இடத்தை தனது மகன் அடைய வேண்டும் என்று எண்ணுபவர். குருவும் தகப்பனும் எனக்கு ஒரே நபராக கிடைத்தது எனது அதிர்ஷ்டம் தான். கடைசியாகத்தான் தாய். 

இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் இசையமைப்பாளராக மாறுவதற்கு யுவன்ஷங்கர் ராஜா உள்பட பல இசையமைப்பாளர்கள் காரணம். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்