சாதாரணமா வரலை, வேற மாதிரி வந்திருக்கேன்: 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’நான் சாதாரணமாக வரவில்லை, வேற மாதிரி வந்து இருக்கேன்’ என ’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
’பத்து தல’ இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் சிம்பு ஆவேசமாக பேசினார். ’நான் இங்கே வரும்போது ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, கண்டிப்பாக நான் இந்த விழாவில் அழக்கூடாது என்று நினைத்தேன், உங்களுக்காக அழ கூடாது என்று நினைத்தேன் என ரசிகர்களை பார்த்து கூறினார்.
இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் போன் செய்து கன்னடத்தில் ’மஃப்டி’ என்ற ஒரு படம் இருக்கு, அதில் தமிழில் செய்யலாம் என்று கூறினார். கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் செய்த கேரக்டரை என்னால் பண்ண முடியுமா என்று நான் யோசித்தேன். அதன் பிறகு தைரியமாக ஒப்புக்கொண்டேன். என்னுடன் நடித்த கௌதம் எனக்கு மிகப்பெரிய துணையாக இருந்தார். அவரை நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். ஏனென்றால் சினிமாவைப் பொறுத்தவரை தட்டிக் கொடுக்க யாருமே இருக்க மாட்டார்கள், தட்டி விடுவதற்கு தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆனால் கௌதம் நல்ல பையன், தங்கமான பையன், பல பிரச்சனைகளை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். எனக்கு இந்த படம் வெற்றிகரமாக அமைகிறது இல்லையோ கண்டிப்பாக கவுதமுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று தெரிவித்தார்.
மேலும் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது காட்ஃபாதர் என்றும், ஆன்மீக வழியிலும் அவர் தனக்கு குருவாக இருந்து வருகிறார் என்றும் அவருக்கு என் மேல் இவ்வளவு அன்பு எப்படி என்று எனக்கு தெரியவில்லை என்றும் சிம்பு பேசினார்.
மேலும் முன்பெல்லாம் மிகவும் ஆவேசமாக பேசுவேன், ஆனால் இப்போது சாஃப்ட்டாக தான் பேசுகிறேன், அதற்கு காரணம் இனிமேல் பேச்சு கிடையாது, செயல்தான், ஒரு தடவை மாறி விட்டோம் என்றால், ஒவ்வொரு தடவையும் நம்மை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நான் இப்போது சாதாரணமாக வரவில்லை, வேற மாதிரி வந்து இருக்கேன், இனிமேல் என்னுடைய ரசிகர்களை தலைகுனிய விடமாட்டேன்’ என்று பேசினார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments