சிம்புவை பார்த்ததும் துள்ளி குதித்த போட்டியாளர்கள்: நிரூப் முக்கிய சந்தேகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இன்று முதல் சிம்பு தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த முதல் புரமோ சில மணி நேரங்களுக்கு வெளியாகி வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அடுத்த புரமோவில் போட்டியாளர்கள் முன் சிம்பு தோன்றும் காட்சிகள் உள்ளன. சிம்புவை பார்த்ததும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். சிம்புவை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்ற ரீதியில் அவர்களது மகிழ்ச்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிம்புவை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாயை திறந்த நிரூப், ‘உங்களை நான் சார் என்று கூப்பிடுவதா? அல்லது புரோ என்று கூப்பிடுவதா? என கேட்க அதற்கு சிம்பு 'நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் ‘வந்துட்டேன், இனி இது நம்ம ஷோ’ என்றும் கூறினார். மொத்தத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களில் விருப்பத்துக்குரிய தொகுப்பாளராக சிம்பு முதல் நாளே மாதிரி விட்டதாகவே தெரிகிறது.
#BBUltimate-இல் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 27, 2022
▶️ 6:30 pm onwards..#Day28 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar. @SilambarasanTR_ pic.twitter.com/yMIOue5ocX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments