சிம்புவை பார்த்ததும் துள்ளி குதித்த போட்டியாளர்கள்: நிரூப் முக்கிய சந்தேகம்!

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இன்று முதல் சிம்பு தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த முதல் புரமோ சில மணி நேரங்களுக்கு வெளியாகி வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த புரமோவில் போட்டியாளர்கள் முன் சிம்பு தோன்றும் காட்சிகள் உள்ளன. சிம்புவை பார்த்ததும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். சிம்புவை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்ற ரீதியில் அவர்களது மகிழ்ச்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாயை திறந்த நிரூப், ‘உங்களை நான் சார் என்று கூப்பிடுவதா? அல்லது புரோ என்று கூப்பிடுவதா? என கேட்க அதற்கு சிம்பு 'நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் ‘வந்துட்டேன், இனி இது நம்ம ஷோ’ என்றும் கூறினார். மொத்தத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களில் விருப்பத்துக்குரிய தொகுப்பாளராக சிம்பு முதல் நாளே மாதிரி விட்டதாகவே தெரிகிறது.

More News

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த டிடி: எந்த கேரக்டரில் தெரியுமா?

விஜய் டிவி பிரபலமான டிடி என்கிற திவ்யதர்ஷினி ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

புது காதலருடன் ரொமான்ஸ்: திருமணமான தமிழ் திரைப்பட நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த தமிழ் திரைப்பட நடிகை  புது காதலனுடன் ரொமான்ஸ் செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அஜித் 61' படத்தில் இணையும் பிரபல ஹீரோ?

அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது தமிழ் ஹீரோ ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எங்கு பார்த்தாலும் சிகப்பு: ரம்யா பாண்டியனின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியனின் சிகப்பு காஸ்டியூம் போட்டோஷுட் புகைப்படம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

வந்தாச்சு, ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கடந்த வாரம் வரை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் விலகி விட்டார் என்பது தெரிந்ததே.