சிம்பு பாடிய மாஸ் பாடல் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

லிங்குசாமி இயக்கத்தில் ராம் போதினேனி நடிப்பில் உருவாகி வரும் தி வாரியர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் அந்த பாடல் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த பாடல் வெளியாகி உள்ளது. சிம்பு மற்றும் ஹரிப்பிரியா குரலில் தேவி பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

ராம் பொத்தினேனி, ஆதி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.