'மாநாடு' படப்பிடிப்பில் கட்டாந்தரையில் படுத்து தூங்கிய சிம்பு: வைரல் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பிரமாண்டமாக போடப்பட்ட 'மாநாடு’ போன்ற செட்டில் கடந்த சில நாட்களாக இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு மிகவும் எளிமையாக படப்பிடிப்பின் இடையே கட்டாந்தரையில் படுத்து தூங்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஓரிரு படங்களில் நடித்த நடிகர்கள் கூட தூங்குவதற்கு கேரவன் கேட்கும் காலத்தில், சிம்பு போன்ற பெரிய நடிகர் மண் தரையில் படுத்து தூங்கியது குறித்த புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் பெருமை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். படக்குழுவினர்களும் சிம்புவின் எளிமை குறித்டு பெருமையாக பேசி வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஜோடியாக பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Actors life!!! Man of simplicity!!! #nightshoot #Maanaadu in between shots!! @SilambarasanTR_ @iam_SJSuryah #candidshot pic.twitter.com/rCtrpD97cV
— venkat prabhu (@vp_offl) April 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com