வெளியே வந்த மகத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்த சிம்பு

  • IndiaGlitz, [Monday,August 27 2018]

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் அதிக வெறுப்பை சம்பாதித்த மகத், நேற்று ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மகத்தின் வெளியேறியதால் உண்டான சந்தோஷத்தை வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் யாஷிகா, ஐஸ்வர்யா தவிர அனைவரும் உள்ளூக்குள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மகத்தை சிம்பு சந்தித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. மகத்தின் கைகளை ஒரு நண்பர் பிடித்து கொள்ள சிம்பு, மகத்தின் கன்னத்தில் செல்லமாக அடித்து அதன்பின்னர் 'உன்னை எப்படி அடிச்சாலும் வலிக்காது, ஏன்னா அவ்வளவு அடி ஏற்கனவே வாங்கியிருக்க' என்று கூறி அன்புடன் கட்டித்தழுவி கொள்கிறார்.

இதுதான் சிம்பு, என்னுடைய பெஸ்ட் நண்பர் என்று மகத் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் கூடிய பதிவினை பதிவு செய்துள்ளார். மகத்தின் இந்த பதிவுக்கு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

More News

போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின்: திமுக தொண்டர்கள் உற்சாகம்

திமுக தலைவராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த கருணாநிதி சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து திமுகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது

சத்தம் போட்டால் ஒரு லட்சம் அபராதம், 5 வருடம் ஜெயில்: மும்பையில் அதிரடி

அமைதியான சுற்றுச்சூழலை மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் விரும்புவதுண்டு. ஆனால் அதிகரித்து வரும் வாகனங்கள், தொழிற்சாலைகளால் அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது.

அமித்ஷா சென்னை வருகை திடீர் ரத்து!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாகலந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

உலகிலேயே அழகிய கையெழுத்து திறமை கொண்ட சிறுமி

ஒரு மனிதனுக்கு கையெழுத்து, தலையெழுத்து இரண்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. ஆனால் பெரும்பாலானோர்களுக்கு இவற்றில் இரண்டில் ஒன்றுதான் நன்றாக இருக்கும்

கேரள வெள்ள நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கிய ஸ்டண்ட் இயக்குனர்

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் அம்மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் இன்னும் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ளனர்.