எடை குறைப்பு மட்டுமல்ல, இன்னும் பல மாற்றங்கள்: சிம்பு குறித்து இலக்கியா!
- IndiaGlitz, [Friday,October 30 2020]
நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை 100 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் இருந்தார் என்பதும் அந்த எடையுடன் அவர் நடித்த ஒரு சில படங்கள் படுதோல்வி அடைந்தன என்பதும் தெரிந்ததே
சிம்புவின் உடல் எடையைப் பார்த்து அவரது ரசிகர்களே அதிருப்தி அடைந்த நிலையில் அடுத்த படம் நடிப்பதற்குள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மனதளவில் அவர் உறுதி கொண்டார். இதனை அடுத்து கேரளா சென்ற அவர் கடினமாக உழைத்து, உடற்பயிற்சி செய்து தனது உடலை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் குறைத்தார். தற்போது அவர் பத்து வருடங்களுக்கு முன்னிருந்த ஸ்லிம் சிம்பு ஆக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிம்புவின் உடல் எடை ரகசியம் குறித்து அவரது தங்கை இலக்கியா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்து உள்ளார். அதில் எடை குறைப்பு மட்டுமல்ல சிம்புவிடம் மேலும் பல மாற்றங்கள் இருப்பதாகவும் வாழ்க்கையின் லட்சியம், நோக்கம் ஆகியவை அறிந்து கொள்ளவும் உதவி இருப்பதாகவும் இலக்கியா கூறியுள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் என்று இலக்கியா தெரிவித்துள்ளார்.
He’s gone through a lot for this transformation. This transformation was not just for losing weight but to know his true self vision purpose and goals . I was with him for few days during this journey and I’ve seen him working so hard towards his goals and hats off 2his willpower https://t.co/uWUbmacqQj
— TR Elakkiya Abhilash (@ELAKKS) October 29, 2020