விஜய்சேதுபதி படத்தில் இணைந்த சிம்பு: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Thursday,March 18 2021]

நடிகர் சிம்பு மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த பாடகர் என்பதும் அவர், தான் நடிக்கும் படங்களில் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே

குறிப்பாக சமீபத்தில் கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை சிம்பு பாடினார் என்பதும், அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி விஜய்சேதுபதி நடித்துவரும் அடுத்த படத்திலும் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

’முருகா’ என்று தொடங்கும் இந்த பாடலை சிம்பு பாடியிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே

விஜய் சேதுபதி ஜோடியாக மேகாஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மகேந்திரன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது