கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு': செம அப்டேட் கொடுத்த சிம்பு

  • IndiaGlitz, [Friday,July 29 2022]

சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் செம அப்டேட் ஒன்றை சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்தது என்பதும் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் சிம்பு, சித்தி இத்நானி, ராதிகா, சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்த சிம்பு தற்போது டப்பிங் பணியை முழுமையாக முடித்துவிட்டதாக கூறியதோடு, இதுகுறித்த அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.