சேலம் ஏரிகளை திடீரென பார்வையிட்ட சிம்பு: புதிய திட்டம் என்ன?

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

பியூஸ் மானுஸ் என்ற சமூக ஆர்வலர் சேலம் பகுதி மக்களுடன் இணைந்து சில ஏரிகளை தூர் வாரினார் என்பதும், அந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீர்தான் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் காவிரி தண்ணீருக்காக வருடக்கணக்கில் போராடி கொண்டிருக்காமல் நம் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று சிம்பு சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து பியூஸ் மானுஸ் அவர்களின் அழைப்பை ஏற்று சிம்பு இன்று சேலம் பகுதியில் உள்ள மூக்கனேரி உள்ளிட்ட மூன்று ஏரிகளை பார்வையிட்டார். அப்போது அந்த ஏரியை தூர்வாறும் பணி நடந்தது எப்படி என்பது குறித்தும் அவர் தெரிந்து கொண்டார்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தூர்வாரி சீரமைப்பது குறித்து திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்த திட்டம் முழு நிலையில் தயாரானவுடன் அதுகுறித்து விரிவாக விளக்குவேன் என்றும் சிம்பு கூறியுள்ளார். 

காவிரியில் கிடைக்கும் ஒருசில நூறு டி.எம்.சி தண்ணீருக்காக வருடக்கணக்கில் போராடுவதை விட நம் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற சிம்புவின் புதிய முயற்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

More News

நீங்க வேற லெவல் மாஸ்: சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த ஹர்பஜன்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீரெட்டிக்கு எதிராக போராட்டம் செய்த விஷால் பட நடிகை கைது

கடந்த சில நாட்களாக ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகை கதிகலக்கி கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

சென்னையில் செயின் திருடனை விரட்டி பிடித்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு

சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவர் ஒருவரிடம் நோயாளி போல் நடித்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண் மருத்துவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினார்.

தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு கமல்ஹாசன் கூறிய நன்றி

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டும் இந்த சட்டம் இல்லை. 

உதயநிதி கேட்ட அதே கேள்வியை கேட்ட ஆர்.ஜே.பாலாஜி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடிய அரசியல் கட்சிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்,