சேலம் ஏரிகளை திடீரென பார்வையிட்ட சிம்பு: புதிய திட்டம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பியூஸ் மானுஸ் என்ற சமூக ஆர்வலர் சேலம் பகுதி மக்களுடன் இணைந்து சில ஏரிகளை தூர் வாரினார் என்பதும், அந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீர்தான் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் காவிரி தண்ணீருக்காக வருடக்கணக்கில் போராடி கொண்டிருக்காமல் நம் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று சிம்பு சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து பியூஸ் மானுஸ் அவர்களின் அழைப்பை ஏற்று சிம்பு இன்று சேலம் பகுதியில் உள்ள மூக்கனேரி உள்ளிட்ட மூன்று ஏரிகளை பார்வையிட்டார். அப்போது அந்த ஏரியை தூர்வாறும் பணி நடந்தது எப்படி என்பது குறித்தும் அவர் தெரிந்து கொண்டார்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தூர்வாரி சீரமைப்பது குறித்து திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்த திட்டம் முழு நிலையில் தயாரானவுடன் அதுகுறித்து விரிவாக விளக்குவேன் என்றும் சிம்பு கூறியுள்ளார்.
காவிரியில் கிடைக்கும் ஒருசில நூறு டி.எம்.சி தண்ணீருக்காக வருடக்கணக்கில் போராடுவதை விட நம் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற சிம்புவின் புதிய முயற்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com