அந்த பத்து பேரில் நானும் ஒருவன்: சிம்பு
- IndiaGlitz, [Thursday,March 22 2018]
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரையுலகினர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது,.
இந்த கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் கூறிய கருத்துக்களில் ஒன்று நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் படத்தின் பட்ஜெட் குறையும் என்றும் கூறியதுதான். இதுகுறித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிம்பு கூறியதாவது:
“தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது. நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள்? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குத் தெரிய வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று ஆவேசமாகப் பேசினார்.
சிம்புவின் இந்த பேச்சை விஷால் உள்பட அனைவரும் பாராட்டினாலும், ஒருசிலர் சிம்பு கருத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.