'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது ஒன்று தான் காரணம்: சிம்பு

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு என ஒரு பார்வை உள்ளது. அந்த பார்வையை மாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை இந்த ‘மாநாடு’ படம் கொடுத்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று நடிகர் சிம்பு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தின் டீசர் இன்று மதியம் வெளியானது. இந்த டீஸர் இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ‘மாநாடு’ படம் குறித்து பேட்டி அளித்த சிம்பு கூறியதாவது:

எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். சிவனை ரொம்பப் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என்றில்லாமல் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன். இந்தச் சமூகத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் மீது ஒரு பார்வை இருக்கிறது. அதை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று பண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன்.

இந்தப் படத்தில் அந்த விஷயத்தைப் பேசுவதற்குக் கதை சரியாக அமைந்தது. அதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமாக இருக்கும். எந்த மொழியிலும் நல்லதொரு படம் வெளியானால் இந்தியாவில் கொண்டாடுவார்கள். அப்படியொரு படமாக 'மாநாடு' இருக்கும்”.

இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.