'2.0' படத்தை சிம்பு எங்கே பார்த்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்த்த பல கோலிவுட் பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் இந்த படத்தை புகழ்ந்து பாராட்டினர்

இந்த நிலையில் இடைவிடாத படப்பிடிப்பின் காரணமாக பிசியாக இருந்த நடிகர் சிம்பு நேற்று இந்த படத்தை படப்பிடிப்பின் இடையே பொள்ளாச்சியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் பார்த்தார். பொள்ளாச்சி தியேட்டருக்கு சிம்பு வந்தபொது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் சிம்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.