'மாநாடு' 100வது நாளில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த சிம்பு: வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,March 04 2022]

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'மாநாடு’. இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இந்த படம் நூறாவது நாள் என்ற சாதனையை எட்டியுள்ளது.

மாஸ் நடிகர்களின் படமாக இருந்தால் கூட ஒரே வாரத்தில் கூட்டம் குறைந்தது திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டு வரும் நிலையில் சிம்புவின் 'மாநாடு’  திரைப்படம் இந்த டிஜிட்டல் உலகில் 100 நாட்கள் திரையரங்களில் ஓடி இருப்பது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு 'மாநாடு’ படத்தின் 100-வது நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சிம்பு படம் பார்த்தார். அப்போது அவர் ரசிகர்களுடன் செல்பி புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரோஹினி திரையரங்கின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.