தல, தளபதி குறித்து சிம்பு கூறியது என்ன?
- IndiaGlitz, [Monday,March 12 2018]
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் கலந்து கொண்ட சிம்பு, தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்த தனது கருத்தை தெரிவித்தார்.
என் மனசுல பட்டதை நான் வெளிப்படையாக தைரியமாக பேசுவதற்கு காரணமான ஒரு மனிதர் அஜித் சார் என்று தல அஜித்தை குறித்து சிம்பு தெரிவித்தார்.
பின்னர் தளபதி விஜய் குறித்து அவர் தெரிவித்தபோது, ரஜினி சார் எனக்கு எப்படி ஒரு முன்னோடியோ, அதேபோல் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறிய ஒருவரான விஜய்யும் எனக்கு முன்னோடிதான். நான் அஜித்தின் ரசிகன் தான் அதில் மாற்றமில்லை, ஆனால் நான் கஷ்டப்பட்டபோது எனக்கு உதவிய தமிழரான விஜய்யின் தம்பியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சிம்பு தெரிவித்தார்.