வருங்கால மனைவி குறித்து சிம்புவின் கருத்து!

கொரோனா விடுமுறையில் கோலிவுட் திரையுலகில் உள்ள பெரும்பாலான நடிகைகள் தங்களது சமூக வலைதளத்தில் வித்தியாசமான, ரசிக்கத்தக்க வகையிலான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஆனால் நடிகைகள் போல் பெரும்பாலான நடிகர்கள் வீடியோக்களை வெளியிடுவது இல்லை. ஒரு சிலர் மட்டுமே சில விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு பிரியாணி சமைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு தனது கையாலேயே பிரியாணி செய்து கொண்டிருக்கும் அந்த வீடியோவில் இடையில் நடிகர் விடிவி கணேஷ் அவருடன் உரையாடுகிறார்.

சிம்பு சமைப்பதை பார்த்து அவர், ‘வருங்கால மனைவிக்கு வீட்டில் வேலையே இருக்காது போல் தெரிகிறது’ என்று கூற அதற்கு சிம்பு, ‘வீட்டில் வேலை செய்வதற்கா ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வருகிறோம். அவர் என்ன வேலைக்காரியா? என லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதோடு, மனைவி என்பவர் துணைவி என்றும் அவரை மதிக்க கற்று கொள்ள வேண்டும் என்று சிம்பு கூறினார்.

வருங்கால மனைவியை இப்போதே மதிக்கும் குணம் கொண்ட சிம்புவுக்கு மனைவியாக வரப்போகிறவர் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

த்ரிஷாவுக்கு பிடித்த மூன்று நடிகர்கள் யார் யார்?

இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் பல முன்னணி நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

கொரோனா நிவாரண நிதி வழங்கிய உலகப் பணக்காரர்கள்: மூன்றாவது இடத்தில் இந்திய தொழிலதிபர்!!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே சில மாதங்கள் ஊரடங்கில் முடங்கியிருந்தன.

கொரோனா வைரஸோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்: கைவிரித்த WHO!!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை அடியோடு ஒழிக்க முடியாது, அதோடு வாழ்வது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்

பாக்சிங் நடிகையை பாத்ரூமில் உட்கார்ந்து பாட்டு பாட வைத்த கொரோனா

நடிகை ரித்திகா சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் துணி துவைக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நயன்தாரா பட நடிகையின் 'வாத்தி கம்மிங்' வெர்ஷன்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் மாதமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்