சிம்புவின் லக்கி நம்பர் 9.....! இன்னும் விட்டுக்கொடுக்காத சிம்பு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு திரைப்படங்களில் தொடர்ந்து நயன் (9 எண்) பயன்படுத்தி வருவது, சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு ஹீரோவாக நடித்த "காதல் அழிவதில்லை" திரைப்படத்திலிருந்து, இந்த 9 எண் செண்டிமெண்ட் தொடர்கிறது. சிம்புவிற்கு 9 என்ற எண் தான் அதிர்ஷமான எண் என கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான திரைப்படங்களின் போஸ்டர்கள், பாடல்கள் மற்றும் ட்ரைலர்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடும் போது 9 என்ற எண்ணை மையமாக வைத்தே வெளியிட்டார். இவை வெளியாகும் நேரங்களை கூட்டினால் பெரும்பாலும் 9 என்ற எண்ணே வரும்.
சிம்பு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கியது கூட 9.09 மணிக்குத்தான்.கடந்த ஆண்டு, அக்டோபர் 22- இல் சிம்பு "ஐ எம் கம்மிங் பேக்" என்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த காணொளி வெளியான நேரம் காலை 09.09 am ஆகும். சிம்பு உடல் எடையைக் குறைத்து பிட்டாக மாறியதற்குப்பின் ரீ-என்ட்ரி கொடுத்த திரைப்படம் என்றால் அது ஈஸ்வரன் தான். ஈஸ்வரன் பட டீசரை அதிகாலையில் 04.32 மணிக்கு ரிலீஸ் செய்திருந்தார். இதன் கூட்டுத்தொகை 9 ஆகும்.
இதையடுத்து நவம்பர் 19-ஆம் தேதி காலை 09.09 மணிக்கு மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதன்பின் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வருடம் நவம்பர் 21-ஆம் தேதி, காலை 10.44 மணிக்கு வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து 10.08-மணிக்கு பாடலை ரிலீஸ் செய்ய, 04.50 மணிக்கு லிரிக் காணொளியை வெளியிட, சில நாட்கள் கழித்து ட்ரைலர் ரிலீஸ் ஆன நேரமும் மாலை 05.04 மணியாக இருந்தது. இவை அனைத்தின் கூட்டுத்தொகையும் 9-ஆக இருந்த நிலையில், ரசிகர்களை இது இன்னும் யோசிக்க செய்தது.
சிம்பு நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் "வெந்து தணிந்தது காடு" என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதன் நேரமும் 12.15 மணியாகவும், கூட்டுத்தொகை 9 ஆகவும் அமைந்திருந்தது. இதனால் பல்வேறு யூகங்களை வழிவகுத்த நெட்டிசன்கள், சில சமயங்களில் கலாய்த்தும் மீம்ஸ் பதிவிட்டு வந்தனர்.
மாநாடு, பத்துதல, மஹா, வெந்து தணிந்தது காடு, நதிகளில் நீராடும் சூரியன் போன்ற திரைப்படங்கள் சிம்புவின் கையில் உள்ள நிலையில், இனி வரும் வருடங்களில் சிம்பு படு பிஸியாக இருக்கப்போகிறார். வரப்போகும் படங்களும் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருந்துவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments