வாலு விஷயத்தில் அஜீத்தின் அமைதி ஏன்? சிம்பு விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் 'வாலு' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது என்றாலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அவர் மனதளவிலும் பொருளாதர அளவிலும் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பதை அனைவரும் தெரிந்ததே. இதுகுறித்து சிம்பு ஒரு பேட்டியில் கூறியதாவது, "வாலு பட பிர்ச்சனையல் தன் மீது உண்மையிலேயே அன்பு கொண்டவர்கள் யார்? என்பதையும் தனது எதிரிகள் யார் என்பதையும் புரிந்து கொண்டதாக கூறினார்.
மேலும் நான் அஜீத்தின் ரசிகனாக இருந்தாலும் விஜய்யை எனக்கு பிடிக்காது என்று அர்த்தமில்லை. இளையதளபதி விஜய் அனைவரிடத்திலும் அளவோடு பேசி பழகுபவராக இருந்தாலும், என்னிடம் மட்டும் மனம் விட்டு பேசுபவதோடு என்னை தன்னுடைய சகோதரராக நினைத்து பழகுவார்.
மேலும் வாலு படம் குறித்து அஜீத் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்றாலும், எனது தந்தையிடமும் அவர் வாலு படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என ஏற்கனவே வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். மேலும் இந்த விஷயத்தில் அவர் வெளிப்படையாக பேசாததற்கு முக்கிய காரணம், இந்த படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அஜீத்தின் நெருங்கிய நண்பர் என்பதே. அவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகவே அஜீத் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com