சென்னை திரும்பினார் சிம்பு! அடுத்த அதிரடி எப்போது?

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

கடந்த சில வாரங்களாக தாய்லாந்து நாட்டில் படப்பிடிப்பு மற்றும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்திக்கவிருப்பதாகவும், அப்போது ரசிகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கவிருப்பதாகவும், சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளை அவர் எடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் இன்று சென்னை திரும்பியுள்ளார் சிம்பு. சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வரும் காட்சிகள் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பெரிய தாடியுடன், ஸ்லிம் உடம்புடன் இருக்கும் சிம்புவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சிம்பு தற்போது ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும் கவுதம் கார்த்திக்குடன் ஒரு ஆக்சன் படத்தில் நடித்து வரும் சிம்பு, ‘மாநாடு’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து ‘மகாமாநாடு’ என்ற படத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

காமசூத்ராவின் அடுத்த பாகத்தில் சன்னிலியோன்? 

கடந்த 1996ஆம் ஆண்டு மீரா நாயர் இயக்கத்தில் ரேகா நடித்த 'காமசூத்ரா' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் கோல்டன் சீஷெல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதோடு,

'தளபதி 64' படத்தில் விஜய்சேதுபதி: எப்படி சாத்தியம் ஆனது?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ள நிலையில் அவர் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

இந்தி மொழி குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய கருத்து!

இந்தியா முழுவதும் பரவலாக பரவியிருக்கும் இந்தி மொழி, தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக நுழைய முடியாத வகையில் உள்ளது. அதற்கு திராவிட கட்சிகளின் தீவிர எதிர்ப்பு முக்கிய காரணம்

உண்மையான பக்திமான் யார்? நடிக சிவகுமார் விளக்கம்

உண்மையான பக்திமான் யார்? என்பது குறித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

விஜய் கூறிய குட்டிக்கதைக்கு விளக்கம் கூறிய பட்டிமன்ற பேச்சாளர்

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவில் விஜய் ஒரு குட்டிக் கதையை கூறினார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் தான் சரியாக இருக்கும்