இது வீரத்தை காட்டும் நேரம் அல்ல. மாணவர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஒரு வாரமாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி தனது வீட்டின் முன் இரவுபகல் பாராது அமைதியாக சிம்பு போராடினார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இன்று காலை முதல் மெரீனா உள்பட சென்னையின் பல பகுதிகளில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை சிம்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வீடியோ தகவல் ஒன்றில், 'மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அறவழியில் போராடியதால் அரசு இந்த விஷயத்தில் சிரத்தை எடுத்து அவசர சட்டம் இயற்றியுள்ளனர். இந்த சட்டம் குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அதன் பின்னர் போராட்டத்தை கைவிடுவோம் என்று மாணவர்கள் கூறியுள்ளனர். மாணவர்களுக்கு போலிசார் மேலும் இரண்டு மணி நேரம் அவகாசம் அளித்திருக்கலாம். ஆனாலும் அவர்களை அமைதி வழியில் கலைந்து செல்லும்படி கூறியது பாராட்டத்தக்கது.
இந்நிலையில் இந்த போராட்டத்தை இத்துடன் நிறுத்தி கொள்வதே அனைவருக்கும் பாதுகாப்பானது. இது வீரத்தை காட்டும் நேரமில்லை. நான் இதை பயத்தினால் கூறவில்லை. மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் அவர்களுடைய அக்கறை கருதியும் இதை வேண்டுகோளாக வைக்கின்றேன். ஒருவேளை நாம் ஏமாற்றப்பட்டால் மீண்டும் களத்தில் குதிப்போம். அதற்கு உங்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. எனவே இந்த போராட்டத்தை இத்துடன் முடித்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் எனது கருத்தை உங்களிடம் திணிக்க விரும்பவில்லை. என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம்' என்று சிம்பு கூறியுள்ளார்.
Let students listen to @iam_str #Jallikattu #JallikattuForever (2/2) pic.twitter.com/NjrtCRaSNE
— Skycinemas (@skycinemas) January 23, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com