முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். சிம்புவின் புதிய போராட்ட அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு இன்று அவருடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 'ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனித்தனியாக போராடினால் வெற்றி கிடைக்காது. தனித்தனியாக போராடுவதால்தான் தடியடி நடத்தி கலைத்துவிடுகிறார்கள்.
என்னுடைய அப்பா தனியாகவும், சீமான் அண்ணன் தனியாகவும் போராடுகிறார்கள். இதுபோல் போராடாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதற்காக நான் ஒரு யோசனை கூறுகிறேன்.
நாளை மாலை 5 மணிக்கு நான் என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தப் போகிறேன். அந்த 10 நிமிடமும் நான் வாயை திறக்கப்போவதில்லை. மெளனமாகவே நிற்கப் போகிறேன். என்னை போலவே தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும், எந்த துறையில் பணி செய்பவர்களாக இருந்தாலும், மாலை 5 மணிக்கு 10 நிமிடங்களுக்கு கருப்பு சட்டை அணிந்து வீட்டை விட்டு வெளியே வந்து மவுனமாக நிற்கவும்.
நாளை நான் போராட்டம் நடத்தும்போது, என்னை முடிந்தால் போலீசார் கைது செய்யட்டும். முடிந்தால் என்னை தடியடி நடத்தி கலையுங்கள். எல்லோரும் என்னைப்போலவே, பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் அப்படியே 10 நிமிடங்கள் நில்லுங்கள். தமிழர்கள் அநாதை இல்லை என்று காண்பிக்க திரளுங்கள். உங்களுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு மக்களே.
எனது வீட்டுக்கு போராட்டம் நடத்த வருவோர் வரலாம். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தராவிட்டால் தமிழர்களின் பிற பிரச்சினைகளில் நான் தலையிடமாட்டேன். நடிகர்கள் தமிழர் பிரச்சினைக்கு வருவதில்லை என்று கூறுவோர் அதன்பிறகு வாய் திறக்க கூடாது. மக்களை போராட கூப்பிடுவதால் அரசியலுக்கு வரப்போகிறேன் என வதந்தி கிளப்ப வேண்டாம். நான் அரசியலுக்கு வரமாட்டேன்.
இவ்வாறு சிம்பு ஆவேசமாக கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments