முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். சிம்புவின் புதிய போராட்ட அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 11 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு இன்று அவருடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 'ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனித்தனியாக போராடினால் வெற்றி கிடைக்காது. தனித்தனியாக போராடுவதால்தான் தடியடி நடத்தி கலைத்துவிடுகிறார்கள்.

என்னுடைய அப்பா தனியாகவும், சீமான் அண்ணன் தனியாகவும் போராடுகிறார்கள். இதுபோல் போராடாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதற்காக நான் ஒரு யோசனை கூறுகிறேன்.

நாளை மாலை 5 மணிக்கு நான் என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தப் போகிறேன். அந்த 10 நிமிடமும் நான் வாயை திறக்கப்போவதில்லை. மெளனமாகவே நிற்கப் போகிறேன். என்னை போலவே தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும், எந்த துறையில் பணி செய்பவர்களாக இருந்தாலும், மாலை 5 மணிக்கு 10 நிமிடங்களுக்கு கருப்பு சட்டை அணிந்து வீட்டை விட்டு வெளியே வந்து மவுனமாக நிற்கவும்.

நாளை நான் போராட்டம் நடத்தும்போது, என்னை முடிந்தால் போலீசார் கைது செய்யட்டும். முடிந்தால் என்னை தடியடி நடத்தி கலையுங்கள். எல்லோரும் என்னைப்போலவே, பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் அப்படியே 10 நிமிடங்கள் நில்லுங்கள். தமிழர்கள் அநாதை இல்லை என்று காண்பிக்க திரளுங்கள். உங்களுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு மக்களே.

எனது வீட்டுக்கு போராட்டம் நடத்த வருவோர் வரலாம். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தராவிட்டால் தமிழர்களின் பிற பிரச்சினைகளில் நான் தலையிடமாட்டேன். நடிகர்கள் தமிழர் பிரச்சினைக்கு வருவதில்லை என்று கூறுவோர் அதன்பிறகு வாய் திறக்க கூடாது. மக்களை போராட கூப்பிடுவதால் அரசியலுக்கு வரப்போகிறேன் என வதந்தி கிளப்ப வேண்டாம். நான் அரசியலுக்கு வரமாட்டேன்.

இவ்வாறு சிம்பு ஆவேசமாக கூறியுள்ளார்.

More News

'வரல்லாம் வரல்லாம் வா பைரவா...இந்த வரிக்க்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெள்ளித்திரையில் திரையிடப்படவுள்ள நிலையில் இந்த படத்தை பார்க்க கோடானுகோடி விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு உணர்வை பாடல் மூலம் பகிர்ந்து கொண்ட பாடகர்

பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன், பாடல் ஒன்றின் மூலம் தனது ஜல்லிக்கட்டு உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்...

தமிழகத்தில் முதல்முறையாக புதிய வரலாறு படைத்த 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் இன்னும் சில மணி நேரங்களில் திரையிடவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த படம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர், கட்-அவுட், போஸ்டர் ஒட்டுதல் ஆகியவற்றில் பிசியாக உள்ளனர்.

PETAவின் முதலைக்கண்ணீருக்கு மயங்கிவிட்டதா அரசு? நடிகர் அசோக்செல்வன் காட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி உள்பட பலர் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகர் அசோக்செல்வன் தனது சமூக வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த கடிதம் பின்வருமாறு:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொதித்தெழும் சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகமே குரல் கொடுத்து வருவது தெரிந்ததே.