'தக்லைஃப்' படத்தின் சூப்பர் ஸ்டில்லை வெளியிட்ட சிம்பு.. அட்டகாசமான கெட்டப்..!

  • IndiaGlitz, [Sunday,August 25 2024]

நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தக்லைஃப்’ படத்தின் சூப்பர் ஸ்டில்லை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, டெல்லி, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் சிம்பு இணைந்தார் என்பதும் சிம்புவுக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்தின் பணியில் இருப்பதாக குறிப்பிட்டு சிம்பு ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.