close
Choose your channels

சேர வேண்டியவங்களோட சேர போற.. சிம்பு வெளியிட்ட 'ஸ்வீட் காரம் காப்பி' டிரைலர்..!

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜூலை 6ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் ’ஸ்வீட் காரம் காபி’ என்ற வெப் தொடரின் டிரைலரை நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்ரைலர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சுமார் மூன்று நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவில் வீட்டில் அடைந்தே இருக்கும் பெண்களான லட்சுமி, மதுபாலா, சாந்தி ஆகியோர் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் வெளியே ஜாலியாக ஊர் சுற்றுகின்றனர் என்பதும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் விளைவுகள் என்ன என்பதுதான் இந்த தொடரின் வெப்தொடரின் கதை என்பது தெரிய வருகிறது.

லட்சுமி, மதுபாலா, சாந்தி, வம்சி கிருஷ்ணா, கவின் ஜெயபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த தொடர் அமேசான் பிரைமில் ஜூலை 6ஆம் தேதி வெளியாகவுள்ளது

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த தொடர் நல்ல வரவேற்பு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’96’ படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த வெப்தொடருக்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment