'குக் வித் கோமாளி' பிரபலத்தின் திரைப்படத்தை அறிமுகம் செய்து வைக்கும் சிம்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தற்போது 3வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்’குகள் மற்றும் கோமாளிகள் ஒருசிலர் திரையுலகில் அறிமுகமாகி ஜொலித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக அஸ்வின், புகழ், ஷிவாங்கி, தர்ஷா குப்தா, பவித்ரா ஆகியோர் தற்போது திரையுலகில் பிஸியாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களில் ஒருவர் ரித்திகா. இவர் ஏற்கனவே ‘ராஜா ராணி’, ‘திருமகள்’, ‘பாக்யலட்சுமி’ உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ள நிலையில் தற்போது ‘வாழு வாழவிடு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகிறார்

‘சிக்சர்’ என்ற படத்தை இயக்குனர் சாச்சி இயக்கி வரும் இந்த படத்தில் தான் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக ரித்திகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு நடிகர் சிம்பு வெளியிட உள்ளதாகவும் ரித்திகா தெரிவித்துள்ளார்.

More News

'அரபிக்குத்து' பாடலுக்காக அசோக்செல்வனிடம் மன்னிப்பு கேட்ட சம்யுக்தா ஹெக்டே: வைரல் வீடியோ!

 'மன்மத லீலை' நாயகி சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்காக நடிகர் அசோக்செல்வனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பூஜா ஹெக்டேவை தேர்வு செய்தது ஏன்? நெல்சன் கூறிய ஒரே ஒரு காரணம்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

'பீஸ்ட்' படத்திற்காக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக முதல் ஐந்து நாட்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள புதுவை அரசு அதிரடியாக

லிங்குசாமியின் அடுத்த படத்தில் இணைந்த சிம்பு!

பிரபல இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

பிரபல நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை: அதிரடி நடவடிக்கை!

பிரபல நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.