'மனமே நீ நிஜம் தானா': அமீர் படத்திற்கு புரமோஷன் செய்த சிம்பு..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

அமீர் நடித்த அடுத்த படத்தின் சிங்கிள் பாடலை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அமீர் நடிப்பில் உருவான ’மாயவலை’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ’வாழ்க்கை ஒரு மாய வலை’ என்று பாடலை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை சினேகன் எழுதியிருக்க யுவன் சங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அமீர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில் அகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள பாடலின் சில வரிகள் இதோ:

மனமே நீ நிஜம்தானா
என மனமே
நீ நிஜம் தானா
இங்கு யாவும் பொய்தானா பாரு

மனிதா நீ நிஜம் தானா
ஏ மனிதா நீ நிஜம் தானா
இங்கு யாவும் பொய்தானா பாரு
நானும் நீயும் போகும் பாதை
எங்கே தெரியாதே
வாழும்போது போடும் வேஷம்
யாரென அறியாதே
காலம் கூறும் பாடம் நூறும்
காரணம் சொல்லாதே
கடவுள் வேறு மனிதன் வேறு
சொன்னால் புரியாதே
மாயவலை மாயவலை
வாழ்க்கை ஒரு மாய வலை..