'AAA'படத்தில் சிம்புவின் ஆச்சரியமான 2வது கேரக்டர்

  • IndiaGlitz, [Saturday,September 24 2016]

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு, தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே அறிந்ததுதான். ஆனால் தந்தை கெட்டப்பில் தோன்றும் கேரக்டரின் பெயர் அஸ்வின் தாதா என்றும் இந்த கேரக்டரின் வயது 60 என்றும் சற்று முன்னர் புதிய தகவல் வெளிவந்துள்ளது.
இளையதலைமுறை நடிகரான சிம்பு வயதான கேரக்டரில் அதுவும் 60 வயது முதியவர் வேடத்தில் தைரியமாக நடிக்கவுள்ளது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சிம்பு இந்த படத்தில் மதுரை மைக்கேல் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா மற்றும் தமன்னா நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.