உலக ரோஜா தினத்தில் பங்கேற்ற சிம்பு!
- IndiaGlitz, [Wednesday,September 22 2021]
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருப்பதற்காக இந்த உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த சிறுமிக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் செப்.22ஆம் தேதி உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த சிறுமி தன்னம்பிக்கை காரணமாக 6 மாதங்கள் உயிர் வாழ்ந்தார் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலக ரோஜா தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் நடிகர் சிம்பு கலந்துகொண்டார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. சிம்பு நடித்த ‘மஹா’ மற்றும் ’மாநாடு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
@SilambarasanTR_ Dancing With Children's ❤????#SilambarasanTR #Maanaadupic.twitter.com/jRZQrNgKy9
— ?????????? ??????????????™ (@Simbu_Shadows) September 22, 2021