சிம்பு-ஓவியா திருமணமா? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களிடையே புகழ்பெற்ற ஓவியா தற்போது திரைப்படங்கள், விளம்பர படங்கள் என பிசியாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் சிம்பு இசையில் ஓவியா பாடிய 'மரண மட்டை' என்ற பாடல் ஓவியா ஆர்மியினர் முயற்சியால் மிகப்பெரிய ஹிட்டாகியது

இந்த நிலையில் தற்போது இணையதளத்தில் சிம்பு-ஓவியா ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக ஒரு வதந்தி புகைப்படத்துடன் பரவி வருகிறது. ஆனால் அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்பதும், 'இது நம்ம ஆளு' படத்தின் ஸ்டில்லில் ஓவியாவின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது என்பதும் பார்த்தவுடனே புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியா, ஆரவ்வை காதலித்தார் என்பதும், அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் தற்போது ஓவியா காதலை மறந்துவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார் என்பதும் தெரிந்ததே. இந்தநேரத்தில் ஓவியா திருமணம் குறித்த வதந்தியால் போலியான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.