'கட்டம் கட்டி கலக்குறோம்': சிம்பு அடுத்த படத்தின் அட்டகாசமான போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் அந்த படத்தின் அறிவிப்பு அட்டகாசமான போஸ்டர் உடன் வெளியானது. இதையடுத்து, சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி எழுந்துள்ளனர்.
சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே" என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் "டிராகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, அவர் சிம்புவின் படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு தான் இன்று வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியபோது, "ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், எனது மிகவும் நெருக்கமான நண்பரும் திறமையான இயக்குனருமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார். மேலும் "கட்டம் கட்டி கலக்குறோம்" என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். சிம்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
This film will bring back the vintage @SilambarasanTR_ in this new era to set the screens on fire for his STR bloods and i take it as a responsibility 🔥! Proud to work again with my @Ags_production 🧨🧨🧨
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) October 21, 2024
Kattam katti kalakrom ❤️🔥#Vintagestrmood pic.twitter.com/NsYqNau3Wt
Extremely happy to associate with our prestigious @Ags_production & My dear fan, the talented and youthful director @Dir_Ashwath for a terrific entertainer ❤🔥
— Silambarasan TR (@SilambarasanTR_) October 21, 2024
Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood #AGS27
#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh… pic.twitter.com/c9BSMTll0c
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments