'கட்டம் கட்டி கலக்குறோம்': சிம்பு அடுத்த படத்தின் அட்டகாசமான போஸ்டர்..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் அந்த படத்தின் அறிவிப்பு அட்டகாசமான போஸ்டர் உடன் வெளியானது. இதையடுத்து, சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி எழுந்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் டிராகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, அவர் சிம்புவின் படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு தான் இன்று வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியபோது, ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், எனது மிகவும் நெருக்கமான நண்பரும் திறமையான இயக்குனருமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார். மேலும் கட்டம் கட்டி கலக்குறோம் என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். சிம்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

துலாம் முதல் மீனம் வரை ராசிகளுக்கான மாத பலன்கள் - ஆதித்ய குருஜி

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான ஆன்மீக ஜோதிட பலன்கள்

எல்லாத்துக்கும் விஜய் சேதுபதி தான் காரணமா? அர்னவ் இன்ஸ்டா போஸ்ட்டால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்னவ் வெளியேறிய நிலையில், அவர் வெளியேறும் போது அவரை நக்கலாக விஜய் சேதுபதி பேசியதும், அர்னவ்  பேசிய சில விஷயங்களை அவர் கண்டித்ததையும்

நடிகை கவுதமிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி: திரையுலகினர் வாழ்த்து..!

நடிகை கவுதமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு முக்கிய பதவியை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன செஞ்சாலும் தப்பு சொல்றாங்க.. செளந்தர்யாவை கதறி அழவைத்த பெண்கள் அணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சௌந்தர்யா, "நான் என்ன செய்தாலும் தப்பு தான் சொல்றாங்க"

ரஷ்யாவில் வெளியாக இருக்கும் கமல்ஹாசன் திரைப்படம்.. தேதி அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இந்திய திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ரஷ்யாவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், ரஷ்ய மொழியில் இதற்காக டப் செய்யப்பட்டிருப்பதாகவும்