சிம்புவின் அடுத்த படத்திற்கு 'தல' டைட்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த டைட்டிலை 10 இயக்குனர்களை இணைந்து அறிவிக்க உள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிரபல இயக்குனர்கள் வெங்கட்பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய்மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் ஆகிய 10 இயக்குனர்கள் இந்த படத்தின் டைட்டிலை சற்று முன் அறிவித்துள்ளனர்.
சிம்புவின் அடுத்த படத்திற்கு ’பத்து தல’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் சூர்யாவின் ’சில்லுனு ஒரு காற்று’ உள்பட ஒருசில படங்களை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். இவர் தயாரிக்கும் 20 வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
Here's the title look of @nameis_krishna sir directorial starring @SilambarasanTR_ & @Gautham_Karthik
— karthik subbaraj (@karthiksubbaraj) December 24, 2020
Produced by @StudioGreen2 @kegvraja @NehaGnanavel
All the very best to the whole team ????#PathuThala pic.twitter.com/Ir3feimrmw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments