சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ரிலீஸ் தேதியை மாற்றி பிரபல தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
சிம்பு நடித்து முடித்துள்ள ‘மஹா’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும், இதில் ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள ’மஹா’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் பெற்றுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’மஹா’ திரைப்படம் மே 27-ஆம் தேதி ரிலீஸாகும் என ஆர்கே சுரேஷ் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து ’மஹா’ படம் 2 வாரங்கள் தள்ளி போகிறது.
சிம்பு ஹன்சிகா, சந்தானம், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜமீல் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy to announce our next theatrical project #june10 @SilambarasanTR_ @ihansika @MathiyalaganV9 pic.twitter.com/2y3cq2Cogv
— RK SURESH (@studio9_suresh) May 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments