சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Thursday,May 12 2022]

சிம்பு நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ரிலீஸ் தேதியை மாற்றி பிரபல தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

சிம்பு நடித்து முடித்துள்ள ‘மஹா’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும், இதில் ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள ’மஹா’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் பெற்றுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’மஹா’ திரைப்படம் மே 27-ஆம் தேதி ரிலீஸாகும் என ஆர்கே சுரேஷ் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து ’மஹா’ படம் 2 வாரங்கள் தள்ளி போகிறது.

சிம்பு ஹன்சிகா, சந்தானம், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜமீல் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

வதந்தியால் எனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை: பிரபல நடிகை புலம்பல்

வதந்தியால் தனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்க வில்லை என பிரபல நடிகை ஒருவர் புலம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அனிருத் பாடிய 'டான்' ஜலபுல ஜங்கு' பாடல்: சிவகார்த்திகேயனின் வேற லெவல் டான்ஸ்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மொத்த காண்டையும் இறக்கிட்டாப்ல: கமலின் 'பத்தல பத்தல' பாட்டை விமர்சனம் செய்த கஸ்தூரி

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தின் 'பத்தல பத்தல' என்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்

'மாமன்னன்' படம் தான் கடைசி படமா? உதயநிதி பேட்டி

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'மாமன்னன்

நடிகையை ஸ்கேன் எடுத்தபோது படம் பிடித்த மர்ம நபர்: போலீஸார் விசாரணை

தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டரில் நடிகையை ஸ்கேன் செய்த போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவரை படம் எடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.