சிம்புவின் அடுத்த படம்: டைட்டில், இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த அதிகாரபூர்வ தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 23 2020]

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ’மாநாடு’ திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிம்புவின் அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் 20வது படமான இந்த படத்தை கிருஷ்ணா இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ ஆரி நடித்த ’நெடுஞ்சாலை’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு உடன் இளம் ஹீரோ கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ வழக்கில் திடீர் திருப்பம்!

இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வரும் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது

இவர்தான் டைட்டில் வின்னர்: தமிழ் திரைப்பட இசையமைப்பாளரின் பதிவு!

பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி, பாலாஜி, ரியோ ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் பலர் கணித்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

ரூ.220 கோடி சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்: யூடியூப் ஆச்சரியம்

ரஷ்யாவை சேர்ந்த 9 வயது சிறுவன் ரூபாய் 220 கோடி சம்பாதித்து உலகின் அதிக வருவாய் பெறும் யுடியூபர்களில் முதலிடம் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தாய்லாந்து மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான ஆபாச படங்கள்: கசியவிட்டது ராணியா?

தாய்லாந்து மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான ஆபாச புகைப்படங்கள் இங்கிலாந்து நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸை ஓட வைத்த பிக்பாஸ்: தடுக்கி விழுந்த பாலா!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்று வரும் பால் & கேட்ச் டாஸ்க்கில் நேற்று சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளனர். இந்த நிலையில் இன்றும் அந்த டாஸ்க் தொடர்கிறது