close
Choose your channels

கட் அவுட் வைங்க, அண்டா அண்டாவா பால் ஊத்துங்க! சிம்புவின் நக்கல் வீடியோ

Tuesday, January 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ள தனது 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் ரிலீசின்போது தனது ரசிகர்கள் தனக்கு கட் அவுட், பேனர், வைக்க வேண்டாம், அதற்கு பாலாபிஷேகம் செய்யும் பணத்திற்கு பெற்றோர்களுக்கு உடையும், சகோதர சகோதரிகளுக்கு சாக்லேட்டும் வாங்கி தாருங்கள்' என்று அறிவுறுத்தியிருந்தார்.

சிம்புவின் இந்த வீடியோவை ஒருசிலர் கலாயத்தனர். அவருக்கு இருப்பதே இரண்டு அல்லது மூன்று ரசிகர்கள் தான், அதற்கு இந்த பில்டப்பா? விளம்பரத்திற்காக இதுபோன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்' என்று சமூக வலைத்தளங்களில் பதிவும் செய்தனர்.

இதனையடுத்து சிம்பு தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கட் அவுட், பாலாபிஷேகம் வேண்டாம் என்று நான் கூறியதை சிலர் கிண்டல் செய்துள்ளனர். எனக்கு இருப்பதே இரண்டு அல்லது மூன்று ரசிகர்கள்தான் என்று கூறியுள்ளனர். அதனால் அந்த இரண்டு, மூன்று ரசிகர்களுக்கு என அன்பு வேண்டுகோள். எனது ரசிகர்கள் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் ரிலீஸ் ஆகும்போது எனக்கு கட் அவுட் வையுங்கள், பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம், அண்டா அண்டாவா பால் ஊத்துங்க, வேற லெவலில் இந்த படத்தின் ரிலீசை கொண்டாடுங்கள்'. ஏனெனில் எனது ஒருசில ரசிகர்கள் செய்யும் இந்த செயலால் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. என்று நக்கலுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment