'இது நம்ம ஆளு' ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் சிம்பு பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியதால் இந்த நிறுவனம் 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற தயங்கியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் மீண்டும் 'இது நம்ம ஆளு' தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கியுள்ளதால் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும், மேலும் இந்நிறுவனம் செய்யும் புரமோஷன் காரணமாக இந்த படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments